< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வீடு புகுந்து இன்வெட்டர், பேட்டரி திருட்டு
|30 July 2023 11:03 PM IST
முத்தியால்பேட்டையில் வீடு புகுந்து இன்வெட்டர், பேட்டரி திருடப்பட்டன.
புதுச்சேரி
முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் பேட்டை 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 39). சம்பவத்தன்று இவரது வீட்டில் சுற்றுச்சுவர் சுவர் ஏறி குதித்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் வெளியே வைத்திருந்த இன்வெட்டர், பேட்டரி ஆகியவற்றை திருடி கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் இளவரசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் வெளியே வைத்திருந்த சமையல் கியாஸ் சிலிண்டரை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது.