< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா
|20 July 2022 11:45 PM IST
நிலுவையில் உள்ள ஓய்வூதிய உயர்வை உடனே வழங்கவேண்டும் என பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா நடத்தினா்
புதுச்சேரி
நிலுவையில் உள்ள ஓய்வூதிய உயர்வை உடனே வழங்கவேண்டும், விருப்ப ஓய்வூதியதாரர்களுக்கு மறுக்கப்பட்ட பலன்களை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜசேகர் தொடகக உரையாற்றினார். தர்ணாவில் ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் முத்து, பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.