< Back
புதுச்சேரி
வீட்டுக் கதவை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
புதுச்சேரி

வீட்டுக் கதவை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

தினத்தந்தி
|
9 Aug 2023 10:40 PM IST

கோட்டுச்சேரி அருகே வீட்டுக் கதவை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது.

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஓமலிங்கம் (வயது 86). இவருக்கு உடல் நிலை சரியில்லாததால், புதுச்சேரிக்கு சிகிச்சை பெறச் சென்றார். கோட்டுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்த கலா என்பவர் இவரது வீட்டை தினமும் காலை, மாலையில் சுத்தம் செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் ஓமலிங்கத்தின் வீட்டை சுத்தம் செய்ய இன்று கலா சென்றபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. சி.சி.டி.வி கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது.தகவல் அறிந்து உடனடியாக ஓமலிங்கம் கோட்டுச்சேரி வந்தார். அங்கு வீட்டை ஆய்வு செய்தபோது, பூஜை அறையில் உண்டியலில் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரிய வந்தது.

புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து உண்டியல் பணம் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்