< Back
புதுச்சேரி
தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி

தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
1 Aug 2023 10:43 PM IST

புதுவை அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 'தாய்ப்பாலூட்டலை சாத்தியமாக்குவோம்' என்ற கருத்தை மையமாக கொண்டு தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி புதுவை அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் செஞ்சி சாலை, புஸ்சி வீதி, வழியாக சென்று காந்தி சிலையை அடைந்தது. அங்கு அனைவரும் உலக தாய்ப்பால் வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் துணை இயக்குனர்கள் ஆனந்தலட்சுமி, ராஜாம்பாள், ரகுநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்