< Back
புதுச்சேரி
மனைவி, மாமியார் மீது சரமாரி தாக்குதல்
புதுச்சேரி

மனைவி, மாமியார் மீது சரமாரி தாக்குதல்

தினத்தந்தி
|
31 Aug 2023 9:48 PM IST

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மாமியாரை தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரைக்கால்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மாமியாரை தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துவேறுபாடு

சீர்காழி தென்பாதியை சேர்ந்தவர் சிவா (வயது 40). தொழிலாளி. இவரது மனைவி பூம்பொழில் (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவரை பிரிந்து காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் காமன் கோவில் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் பூம்பொழில் வசித்து வருகிறார்.

சிவா, தனது 2 மகன்களுடன் திரு-பட்டினம் வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 29-ந் தேதி பூம்பொழிலுக்கு பிறந்தநாள் வந்ததால், இரு மகன்களையும் தனது வீட்டில் கொண்டுவந்து விடும்படி, சிவாவிடம் கூறியுள்ளார்.

சரமாரி தாக்குதல்

அதன்படி, சம்பவத்தன்று பிறந்தநாள் கொண்டாட மதியம் பள்ளிக்கூடம் விட்டதும், இளைய மகனை சிவா, பூம்பொழில் வீட்டில் கொண்டுசென்று விட்டுள்ளார். அப்போது மூத்தமகன் குறித்து பூம்பொழில் கேட்டபோது, கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவா, வீடு புகுந்து பூம்பொழிலை தரக்குறைவாக திட்டி, சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க முயன்ற மாமனார், மாமியாரும் தாக்கப்பட்டனர்.

இதில் காயம் அடைந்த பூம்பொழில் உள்பட 3 பேரும் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதல் குறித்த புகாரின்பேரில் திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்