< Back
புதுச்சேரி
பேக்கரி ஊழியர் மீது சரமாரி தாக்குதல்
புதுச்சேரி

பேக்கரி ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

தினத்தந்தி
|
13 Aug 2023 11:51 PM IST

கட்சி அலுவலகம் கட்ட நன்கொடை தராததால் பேக்கரி கடை ஊழியர் சரமாரியாக தாக்கப்பட்டார். இதில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

கட்சி அலுவலகம் கட்ட நன்கொடை தராததால் பேக்கரி கடை ஊழியர் சரமாரியாக தாக்கப்பட்டார். இதில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பேக்கரி

புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார்பாளையம் பகுதியில் விநாயக முருகன் பேக்கரி உள்ளது. இங்கு நேற்று இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் பேக்கரியின் முன்பு வாகனங்களை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.

அப்போது கடையில் இருந்த ஊழியர் ஆனந்த், மோட்டார் சைக்கிள்களை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர்கள் எங்களிடம் எப்படி கூறலாம் என்று ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்த் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உழவர்கரை பகுதியை சேர்ந்த சுப்ரமணி உள்பட 8 பேர் சேர்ந்து ஆனந்தை தாக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சுப்ரமணியை கைது செய்தனர். மேலும் 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.20 ஆயிரம் நன்கொடை

போலீஸ் விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியினர் அலுவலகம் கட்ட சிமெண்டு மூட்டை வாங்குவதற்காக பேக்கரி கடையில் ரூ.20 ஆயிரம் நன்கொடை கேட்டதாக தெரிகிறது.

ஆனால் அந்த பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேக்கரி கடை ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்