< Back
புதுச்சேரி
கார்களின் டயர்களை பதம் பார்க்கும் பாகூர் - கன்னியக்கோவில் சாலை
புதுச்சேரி

கார்களின் டயர்களை பதம் பார்க்கும் பாகூர் - கன்னியக்கோவில் சாலை

தினத்தந்தி
|
27 July 2023 9:40 PM IST

கார்களின் டயர்களை பதம் பார்க்கும் பாகூர் - கன்னியக்கோவில் சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

பாகூர்

புதுவையின் நெற்களஞ்சியமாக விளங்கும் பாகூருக்கு கன்னியக்கோவில் சாலை பிரதான சாலையாக இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பல இடங்களில் இந்த சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வப்போது 'பேட்ஜ் ஒர்க்' செய்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் சரிசெய்து வந்தனர். ஆனாலும் சற்று கனமழை பெய்தாலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையில் சிதறுகின்றன.

இதனால் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளன.மோசமான நிலையில் உள்ள இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனம், கார்களின் டயர்களை ஜல்லி கற்கள் குத்தி பதம்பார்ப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாகூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்