< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
|26 Aug 2023 9:37 PM IST
புதுவையில் கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி
கண்தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி செஞ்சிலுவை சங்கம், இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. புதுவை கம்பன் கலையரங்கம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தை செஞ்சிலுவை சங்கத்தின் புதுவை கிளை தலைவர் டாக்டர் லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் டாக்டர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவிகள் சிலர் கண்தானத்தை வலியுறுத்தி தங்களது முகத்தில் ஓவியங்களை வரைந்திருந்தனர். அவர்கள் தங்களது கண்களில் கருப்பு துணியையும் கட்டியிருந்தனர். இந்த ஊர்வலம் புஸ்சி வீதி, மிஷன் வீதி வழியாக சென்று பாரதி பூங்காவில் நிறைவடைந்தது.