< Back
புதுச்சேரி
பெண்களுக்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி

பெண்களுக்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
14 July 2023 9:16 PM IST

காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால்

காரைக்கால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சந்தானசாமி தலைமை தாங்கி, பெண்கள் பொருளாதார சார்பற்ற வாழ்வு வாழ கல்வியின் அவசியம் குறித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக வக்கீல் வினோதினி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு குடும்பத்தில், அலுவலகத்தில், சமுதாயத்தில் பெண்கள் தங்களது திறன்களை எவ்வாறு வெளிப்படுத்துவது, பெண்களுக்கான சட்ட உதவி, வரதட்சணை, பணியிடத்தில் பாலியல் துன்புறத்தல், சைபர் குற்றம், பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளான குழந்தைகளை எவ்வாறு மீட்பது குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உள் தர உறுதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜபாலன் மற்றும் கல்லூரி ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்