< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
|10 Oct 2023 10:17 PM IST
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் பருவ மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
புதுச்சேரி
புதுச்சேரி கோரிமேடு இந்திராநகர் இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் பருவ மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அதனை தீர்க்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை உளவியல் நிபுணர் சூசன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக பொறுப்பாசிரியை மணிமொழி வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அன்பரசி நன்றி கூறினார்.