< Back
புதுச்சேரி
பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு
புதுச்சேரி

பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு

தினத்தந்தி
|
26 Jun 2023 10:43 PM IST

புதுச்சேரியில் பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

அரியாங்குப்பம்

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஆதிதிராவிடர் நலத்துறை, நகர மற்றும் கிராம அமைப்பு துறை மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

அதன்படி அரியாங்குப்பம் தொகுதி சேத்திலால் நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் பயனாளிகளின் வீட்டுக்கு சென்று பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கையேட்டை வழங்கினார். மேலும் திட்டத்தின் பயன் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் நகர மற்றும் கிராம அமைப்புத்துறை தலைமை அமைப்பாளர் கந்தர்செல்வன், ஆதிதிராவிடர் நலத்துறை நல அதிகாரி விஜயலட்சுமி, ஆய்வாளர் ராஜா மற்றும் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்