< Back
புதுச்சேரி
புதுச்சேரி
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
|8 March 2023 9:49 PM IST
காரைக்காலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
காரைக்கால்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியை நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தேனாம்பிகை கலந்து கொண்டு, வீட்டையும், நாட்டையும் வலுப்படுத்த பெண்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியம்'என்றார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ அதிகாரிகள், நலவழித்துறை ஊழியர்கள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த சைக்கிள் பேரணி, காரைக்கால்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கப்பட்டு, முக்கிய மீனவ கிராமங்கள் வழியாக சென்று நிறைவடைந்தது.