< Back
புதுச்சேரி
சுதந்திர தின விழாவில் விருதுபெற்றவர்கள்
புதுச்சேரி

சுதந்திர தின விழாவில் விருதுபெற்றவர்கள்

தினத்தந்தி
|
15 Aug 2023 11:18 PM IST

சுதந்திர தினவிழாவில் சாதனை படைத்தவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விருதுகளை வழங்கினார்.

புதுச்சேரி

சுதந்திர தினவிழாவில் சாதனை படைத்தவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விருதுகளை வழங்கினார்.

விருதுகள்

புதுவை கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளை வழஙகினார்.

அதன்படி காவல்துறையில் சிறந்த பணிக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கத்தை ஏனாம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரமணமூர்த்தி, காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், புதுவை ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் சைமன் டேவிட் பியராட், ரெட்டியார்பாளையம் ஏட்டு ரகுராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சரின் காவல் பதக்கத்தை காவலர் பயிற்சி பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் பெற்றார்.

ராஜீவ்காந்தி காவல் பதக்கம்

ராஜீவ்காந்தியின் காவல் பதக்கம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதர ரெட்டி, ஊர்க்காவல் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், காவலர் பயிற்சி பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மாகி சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், ஆயுதப்படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சநாதன், முத்தியால்பேட்டை உதவி சப்-இன்ஸ்பெ்கடர் வேல்முருகன், கட்டுப்பாட்டு அறை உதவி சப்-இன்ஸ்பெக்டர் மணிமொழி, பெரியகடை போலீஸ் ஏட்டு முகுந்தன், கடலோர காவல் பிரிவு ஏட்டு ஆனந்து, புகைப்பட பிரிவு ஏட்டு ரங்கநாதன், காவலர் பயிற்சி பள்ளி காவலர் நாதமணி, காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை தமிழ்வேலன், மார்ஸ் அருள்ராஜ், கோட்டுச்சேரி பிரேம்குமார், காட்டேரிக்குப்பம் ராஜேஷ்குமார், இந்திய ரிசர்வ் பட்டாலியன் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டுகள் பன்னீர்செல்வம், ஆனந்தவேலு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த காவல்நிலையம்

சிறந்த காவல்நிலையமாக தேர்வு செய்யப்பட்ட உருளையன்பேட்டை காவல்நிலையத்துக்கான விருது மற்றும் ரொக்கப்பரிசினை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி பெற்றுக்கொண்டார். சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான முதல்-அமைச்சரின் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

பொதுநிர்வாகத்தில் சிறந்த விளங்கிய தொழிலாளர் துறைக்கு முதல்-அமைச்சரின் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டது. சிறந்த களப்பணியாளர்களுக்காக வழங்கப்படும் முதல்-அமைச்சரின் விருது கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் நாராயணன், மேட்டுப்பாளையம் சுகாதார ஆய்வாளர் ஜீவானந்தம், சுகாதார உதவியாளர் சரவணன், துணை மருத்துவ செவிலியர் சுபா, சமூக செயல்பாட்டாளர் ஷர்மிளா பானு, எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

ஓமியோபதி, ஆயுஷ் மருத்துவர்கள், பணியாளர்களுக்கான முதல்-அமைச்சரின் விருதுகள் ஓமியோபதி திட்ட அதிகாரி பாலாஜி, சித்த மருத்துவ திட்ட அதிகாரி இந்திரா, ஆயுர்வேத மருத்துவ அதிகாரி தீப்தி மரியா, சித்தா மருந்தாளுநர் பெர்னாட்சன், ஓமியோபதி மருந்தாளுநர் நித்யா, முதுநிலை எழுத்தர் சுதா, கணக்கு மேலாளர் அனில்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தங்கப்பதக்கம்

தேசிய மாணவர் படையினருக்கான (முதுநிலை) முதல்-அமைச்சரின் தங்கப்பதக்கம் விமானப்படவீரர் பூமேதகனுக்கும், கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம் கடற்கரை வீரர் பரத்ராஜிக்கும் கல்வி செயலாளரின் வெண்கல பதக்கம் கடற்படை வீரர் தமிழ்செல்வனுக்கும் வழங்கப்பட்டது.

இளநிலை பிரிவில் முதல்-அமைச்சரின் தங்கப்பதக்கம் கடற்படையை சேர்ந்த மனிஷாவுக்கும், கல்வி அமைச்சரின் வெண்கல பதக்கம் ரங்லினுக்கும், கல்வி செயலாளரின் வெண்கல பதக்கம் விமானப்படை வீரர் ஆகாசுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்