< Back
புதுச்சேரி
புதுச்சேரி
நிரவி போலீஸ் நிலையத்துக்கு விருது
|24 Jun 2023 11:00 PM IST
நிரவி போலீஸ் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்பட்டது.
காரைக்கால், ஜூன்.25-
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் போலீஸ் நிலையத்திற்கு விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2022-ம் ஆண்டு மாநில அளவில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவி போலீஸ் நிலையம் சிறந்த விருதை பெற்றது.
இந்த விருதை முதல்-அமைச்சர் ரங்கசாமி போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து நிரவி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்தினார்.