< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ஆட்டோ தீ வைத்து எரிப்பு
|24 Aug 2023 11:01 PM IST
வில்லியனூரில் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீவைத்து எரிக்கப்பட்டது.
வில்லியனூர்
வில்லியனூர் சாமியார்தோப்பு மல்லிகா தியேட்டர் வீதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 58). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று இரவு நாகராஜன் தனது ஆட்டோவை வீட்டின் எதிரே நிறுத்தி விட்டு தூங்க சென்றார். நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கணுவாப்பேட்டையை சேர்ந்த வினோத் (வயது 24), ஹரிநாத் (20) ஆகியோர் ஆட்டோவுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பிடிக்க முயன்றார். ஆனால் 2 பேரும் தப்பியோடி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.