வாலிபர்கள் மீது தாக்குதல்
|புதுவை இந்திராகாந்தி சிலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் உரசியதால் தகராறில் வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் கீதன் (வயது 24). இவர் தனது நண்பர் சாந்தகுமார் (24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இந்திராகாந்தி சிலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் முகேஷ் கீதன், சாந்தகுமார் சென்ற மோட்டார்சைக்கிள் மீது உரசி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 2 பேரும் அந்த காரை விரட்டி சென்று ஜிப்மர் மருத்துவமனை எதிரே மடக்கி தட்டிக்கேட்டனர். அப்போது காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டைகளால் முகேஷ் கீதனையும், அவரது நண்பரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முகேஷ் கீதன், சாந்தகுமார் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சகை்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.