< Back
புதுச்சேரி
கடற்கரையில் மீனவர் மீது தாக்குதல்
புதுச்சேரி

கடற்கரையில் மீனவர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
22 Aug 2023 9:33 PM IST

அரியாங்குப்பம் கடற்கரையில் மீனவரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்..

அரியாங்குப்பம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் செங்கோட்டை (வயது 46), மீனவர். வீராம்பட்டினம் கோவில் திருவிழாவுக்காக மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த தனது நண்பர் ஆலயமணி என்பவருடன் கடற்கரையில் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (35), விக்கி (27), அபினேஷ் ஆகியோர் குடிபோதையில் செங்கோட்டையிடம் தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் 3 பேரும் சேர்ந்து செங்கோட்டையை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர். இதில் காயமடைந்த அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், விக்கி ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அபினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்