பல் டாக்டர் மீது தாக்குதல்
|முதலியார்பேட்டையில் காரை வழிமறித்து பல் டாக்டரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முதலியார்பேட்டை
புதுச்சேரி திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் சண்முகபிரியன் (வயது 24). பல் டாக்டர். இவர் படித்த கல்லூரியின் பேராசிரியர் ஒருவரின் திருமணத்திற்காக தனது நண்பர்களுடன் காரில் கடலூர் சென்று விட்டு புதுச்சேரி திரும்பினார். நேற்று இரவு நைனார்மண்டபம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வேகமாக காரை உரசுவது போல கூச்சலிட்டபடி சென்றனர். இந்த நிலையில் முதலியார்பேட்டை தேங்காய்திட்டு சிக்னல் அருகே வந்தபோது அவர்கள் அந்த காரை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் சண்முகபிரியனை காரில் இருந்த இழுத்து தரக்குறைவாக திட்டி, தாக்கி, காரையும் சேதப்படுயதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகபிரியன் மீது தாக்குதல் நடத்தியது யார்? என்று விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.