< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தொழிலதிபர், மனைவி மீது தாக்குதல்
|15 Sept 2023 9:17 PM IST
சொத்து தகராறில் தொழிலதிபர், அவரது மனைவியை தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுச்சேரி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 34). தொழிலதிபர். இவருக்கும், அவரது உறவினர் சிவானந்தம் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று வசந்தகுமார் வீட்டிற்கு சிவானந்தம், அவரது தம்பி தமிழ்வாணன், தமிழ்வாணின் மகன் பாலாஜி, மருமகன் அருண்குமார் மற்றும் புகழேந்தி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் வசந்தகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற வசந்தகுமாரின் மனைவி சவுந்தரியாவையும் அவர்கள் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவானந்தம் உள்பட 5 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.