< Back
புதுச்சேரி
தந்தை, மகன் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
புதுச்சேரி

தந்தை, மகன் உள்பட 3 பேர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
3 Oct 2023 10:44 PM IST

அாியாங்குப்பம் அருகே சாராயக்கடையில் தந்தை, மகன் உள்பட 3 போ் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் இளவரசன் நகரை சேர்ந்தவர் பகலவன் என்ற வீரப்பன் (வயது 49). இவர் நோணாங்குப்பம் படகு குழாம் அருகே சாராயக்கடை நடத்தி வருகிறார். அங்கு குருசுக்குப்பத்தை சேர்ந்த சத்யா காவலாளியாக பணியாற்றி வருகிறார். காந்தி ஜெயந்தி அன்று கடையில் பாதுகாப்பிற்காக சத்யா இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த சிலர், சத்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சாராயக்கடைக்காரர் பகலவன் மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் அங்கு தகராறு செய்தவர்களிடம் தட்டி கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த முகிலன், அவரது நண்பர்கள் மேகவர்மன், கருணாமூர்த்தி உள்ளிட்ட சிலர் பகலவன், அவரது மகன் சுரேஷ் மற்றும் காவலாளி சத்யா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதில் படுகாயம் அடைந்த 3 பேரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் முகிலன், கருணாமூர்த்தி, மேகவர்மன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் மேகவர்மன் (30) மட்டும் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 2 பேர் உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்