< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தம்பதி உள்பட 3 பேர் மீது தாக்குதல்
|2 Sept 2023 11:00 PM IST
புதுவையில் தம்பதி உள்பட 3 பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி
புதுவை சாரம் சுந்தரமூர்த்தி நகர் முத்துமாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 43). இவரது வீட்டருகே அனந்தராமன் என்பவர் மாடுகளை ரோட்டில் கட்டி வைத்து பால் கறந்து வியாபாரம் செய்துள்ளனர். மாட்டு சாணத்தை வாய்க்காலில் கொட்டியதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாலாஜி நகராட்சிக்கு புகார் செய்தார். புகாரின்பேரில் நகராட்சி அதிகாரிகள் வந்து விசாரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அனந்தராமன் மற்றும் 2 பேர் சேர்ந்து பாலாஜியை கத்தியால் கிழித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். அதை தடுக்க வந்த பாலாஜியின் மனவைி புவனேஸ்வரி, உறவினர் மூர்த்தி ஆகியோரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.