< Back
புதுச்சேரி
புதுச்சேரி
என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
|26 Oct 2023 9:10 PM IST
புதுச்சேரி அருகே என்ஜினீயர் உள்பட 2 பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுவை கோவிந்தசாலை பாரதிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் முகிலன் (வயது 30). என்ஜினீயர். சம்பவத்தன்று இவர், தனது நண்பர் நிஷாந்த் என்பவருடன் காமராஜர் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரில் ஒருவர் முகிலனின் தலையில் தட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த முகிலனும், நிஷாந்தும் தட்டிக்கேட்டனர்.
பின்னர் அண்ணா சாலை-செட்டித்தெரு சந்திப்பில் உள்ள ஒரு டீக்கடையில் முகிலன், நிஷாந்த் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த 3 பேரும் முகிலன், நிஷாந்தை உருட்டுகட்டையால் தாக்கி, தங்களிடம் பிரச்சினை செய்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.