< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மதுபோதையில் ரகளை; 2 பேர் கைது
|23 July 2023 10:35 PM IST
கோட்டுச்சேரி அருகே மதுபோதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
திரு-பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திரு-பட்டினம் பைபாஸ் சாலையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், வடகட்டளை பகுதியை சேர்ந்த சிவமணி என்ற சீனு (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நெடுங்காடு பகுதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நரிகரம்பை சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதீஷ் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.