< Back
புதுச்சேரி
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரி

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
12 July 2023 9:42 PM IST

அரியாங்குப்பம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீமதி (வயது 34). இவரது கணவர் பாஸ்கர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். ஸ்ரீமதி தனது 2 மகள்களுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது பாட்டி முருகம்மாள் சம்பவத்தன்று இறந்துவிட்டார். அங்கு வந்த முருகம்மாளின் 3-வது மகன் பிரபாகரன் மற்றும் அவரது மகன்கள் கவி, ராஜ்கமல், வானவராஜ் ஆகியோர் ஸ்ரீமதியை பார்த்து தரக்குறைவாக திட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவி, ராஜ்கமல், வானவராஜ் ஆகியோர் ஸ்ரீமதியை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்