< Back
புதுச்சேரி
மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
புதுச்சேரி

மனைவியை தாக்கி கொலை மிரட்டல்

தினத்தந்தி
|
4 July 2023 10:54 PM IST

புதுவையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுச்சேரி

புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 39). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜெயலட்சுமி தனது குழந்தைகளுடன் திலாசுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் கார்த்திக் ஜெயலட்சுமியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்