கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல்
|புதுவையில் லாரி டிரைவர் கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
திருபுவனை
திருபுவனை சிவசக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜவகர் (வயது 58). இவர் திருபுவனையில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு கடை போட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்தலாரி டிரைவர் மோகன்ராஜ், ஜவகரிடம் ரூ.1,000-க்கு பட்டாசை கடனாக வாங்கி சென்றார். அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஜவகரின் பக்கத்து கடைக்கு வந்த மோகன்ராஜிடம் ஜவகர் ரூ.1000 கடன் தொகையை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் லாரியில் இருந்த இரும்பு கம்பியால் ஜவகரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்கு பின் திருபுவனை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.