< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பெண் மீது தாக்குதல்
|15 Jun 2023 11:21 PM IST
புதுவையில் வீட்டின் முன் மது குடிப்பதை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுவை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது27). இவரது கணவர் கலையரசன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆர்த்திக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று ஆர்த்தியின் வீட்டின் முன் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதை ஆர்த்தி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், ஆர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.