< Back
புதுச்சேரி
பெண் மீது தாக்குதல்
புதுச்சேரி

பெண் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
13 May 2023 9:41 PM IST

காரைக்கால் அருகே நிரவி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவதில் முன்விரோதத்தால் பெண் மீது தாக்குதல் நடத்தியவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி நடுஓடுதுறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுகி (வயது 30). அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜசேகர் (50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே முன்விேராதம் இருந்து வந்தது. நேற்று ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், மரக்கட்டையால் வாசுகியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஸ்கூட்டரையும் எரித்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்