< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பெண் மீது தாக்குதல்
|11 Aug 2023 9:25 PM IST
திருநள்ளாறு அருகே பெண்ணை தாக்கிய தாய்-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரு-பட்டினம்
காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் வடகட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி அஞ்சம்மாள் (வயது 57). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்து விட்ட நிலையில் அஞ்சம்மாள் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் முன் சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் அஞ்சம்மாள் கோழிக்கூண்டை சுத்தம் செய்வதற்காக, வீட்டு வாசலில் வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, பக்கத்துவீட்டில் வசிக்கும் கலா, அவரது மகன் அருண் ஆகியோர் சேர்ந்து சாலையை ஏன் அசிங்கப்படுத்துகிறாய்? என்று கூறி அவரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய அவர் மரக்கட்டை மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் திரு-பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.