< Back
புதுச்சேரி
தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல்
புதுச்சேரி

தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல்

தினத்தந்தி
|
13 Aug 2023 11:39 PM IST

வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதலியார்பேட்டை

வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேறு பெண்ணுடன் குடும்பம்

புதுச்சேரி முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவர் பேக் மற்றும் சீட் கவர் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வீரம்மாள் (வயது 45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அறிவழகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேல்ராம்பேட்டில் அவர்களுக்கு சொந்தமான இடத்தை ரூ.47 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அந்த பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்திக்கொண்டார். அதன் பின்னர் அவர், மனைவியுடன் தொடர்பு இன்றி வீட்டை விட்டு வெளியேறினார்.

வீரம்மாள் அவரை பல இடங்களில் தேடி வந்தார். போன் செய்தால் எடுத்து பேசுவதும் கிடையாது. இந்த நிலையில் அறிவழகன் 100 அடி ரோடு சோழன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியது தெரியவந்தது.

மனைவி மீது தாக்குதல்

உடனே வீரம்மாள் அங்கு சென்று பார்த்தார். அப்போது அறிவழகன் அங்கு வேறொரு பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தியது தெரியவந்தது. இதனை தட்டிக்கேட்ட வீரம்மாளை, அறிவழகனும், அந்த பெண்ணும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகன், மற்றும் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்