< Back
புதுச்சேரி
தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்
புதுச்சேரி

தனியார் நிதிநிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
22 Oct 2023 10:15 PM IST

தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி

முதலியார்பேட்டை நைனார்மண்டபம் கோதாவரி வீதியை சேர்ந்தவர் வல்லரசு (வயது 24). இவர் 100 அடி சாலையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் குருசுக்குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி ரோஜா ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மாத தவணையை முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வல்லரசு அவரது வீட்டுக்கு சென்று பணத்தை வசூலிக்க சென்றார். அப்போது விக்னேஷ், ரோஜா உள்பட 3 பேர் பணம் தர மறுத்து வல்லரசுவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், ரோஜா உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்