< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பிளம்பர் மீது தாக்குதல்
|9 July 2023 9:34 PM IST
முதலியார்பேட்டையில் சாராயம் குடிக்க பணம் கேட்டு தரராததால் பிளம்பர் தாக்கப்பட்டார்.
முதலியார்பேட்டை
முதலியார்பேட்டை உடையார் தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 55) பிளம்பர். நேற்று இவர் வீட்டில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சரத்பாபு சாராயம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுக்கவே ஆத்திரம் அடைந்த சரத்பாபு அருகில் கிடந்த கட்டையை எடுத்து வெங்கடேசை தாக்கிவிட்டு தப்பியோடி விட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.