< Back
புதுச்சேரி
ஐ.டி. நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
புதுச்சேரி

ஐ.டி. நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
6 Sept 2023 10:15 PM IST

புதுவையில் ஐ.டி. நிறுவன ஊழியரை தாக்கிய மனைவி, மாமனார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுச்சேரி

கோரிமேடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். ஐ.டி. நிறுவன ஊழியர். இவரது மனைவி விஜயபிரியா. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கணேஷ் வீட்டிற்கு சென்று விஜயபிரியா, அவரது தந்தை உதயக்குமார், உறவினர்கள் கணேசன், சத்யா ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கச்சென்ற கணேஷின் தந்தை குணசேகரனையும் தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கணேசை தாக்கிய மனைவி விஜயபிரியா, மாமனார் உதயக்குமார் மற்றும் கணேசன், சத்யா ஆகியோர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்