கணவன், மனைவி மீது தாக்குதல்
|மேட்டுப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் மோதுவதுபோல் சென்றதை தட்டிக்கேட்ட கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்குளம்
மேட்டுப்பாளையம் அடுத்த கல்மேடுபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 30). சம்பவத்தன்று இவர், தனது உறவினருடன் வீட்டு வாசலில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ், பாலா, அஜித் ஆகியோர் சத்யபிரியா மீது மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதை சத்யபிரியா தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து சத்யபிரியாவை தாக்கினர். மேலும் தடுக்க முயன்ற அவரது கணவர் பாலபாஸ்கர் மற்றும் உறவினர் ஒருவரும் தாக்கப்பட்டனர்.
இதுகுறித்து சத்யபிரியா கொடுத்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சதீஷ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பாலபாஸ்கர், அவரது மனைவி சத்யபிரியா ஆகியோர் தங்களை தாக்கியதாக சதீசும் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.