< Back
புதுச்சேரி
கணவன், மனைவி மீது தாக்குதல்
புதுச்சேரி

கணவன், மனைவி மீது தாக்குதல்

தினத்தந்தி
|
5 Jan 2023 11:56 PM IST

போக்சோ வழக்கை வாபஸ் பெறக்கோரி கணவன்,மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

புதுச்சேரி

புதுச்சேரி முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறைக்கு சென்ற அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் போக்சோ புகார் கொடுத்தவர் வீட்டிற்கு சென்று, வழக்கை வாபஸ் வாங்குமாறு தகராறு செய்தார். அவர்கள் முடியாது என்ற கூறியதால், ஆத்திரமடைந்த பாஸ்கர், புகார் அளித்த கணவன்-மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்பேரில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்