< Back
புதுச்சேரி
தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
புதுச்சேரி

தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
11 Aug 2023 10:36 PM IST

வம்பாகீரப்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவீரா (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் லசார் கோவில் தெருவில் உள்ள ஒரு கடைக்கு சென்றார்.

அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த அசோக், ஸ்ரீகாந்த், விக்னேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் முத்துவீராவை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி, தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அசோக் உள்பட 3 பேரும் சேர்ந்து முத்துவீராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்