< Back
புதுச்சேரி
டிரைவர் மீது தாக்குதல்
புதுச்சேரி

டிரைவர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
10 July 2023 11:17 PM IST

திருபுவனையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் டிரைவர் தாக்கப்பட்டார்.

திருபுவனை

திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் ஜெயந்தன் (வயது 24). டிரைவர். அவரது அண்ணன் விக்னேஷ் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை விக்னேஷ் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ராஜேசுக்கும், விக்னேசுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று ராஜேஷ், தனது நண்பர் சுபாசுடன் விக்னேசின் வீட்டுக்கு சென்றார். வீட்டில் விக்னேஷ் இல்லாததால் அவரது தம்பி ஜெயந்தனிடம் பணத்தை கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து ஜெயந்தனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்