< Back
புதுச்சேரி
சொத்து பிரச்சினையில் தம்பதி மீது தாக்குதல்
புதுச்சேரி

சொத்து பிரச்சினையில் தம்பதி மீது தாக்குதல்

தினத்தந்தி
|
15 Jun 2023 9:37 PM IST

நெடுங்காடு அருகே சொத்து பிரச்சினையில் தம்பதி மீது தாக்குதல்.

நெடுங்காடு,

நெடுங்காட்டை அடுத்த அண்டூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 55). புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவருக்கு கண் பார்வை போனதால், தற்போது மனைவியுடன் வீட்டில் இருந்து வருகிறார்.

இவருக்கும், அவரது சித்தப்பா மகன் பிரான்சிஸ் பீட்டருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் சவரிமுத்துவை கன்னத்தில் பிரான்சிஸ் பீட்டர் அறைந்ததாக கூறப்படுகிறது. தடுக்க முயன்ற சவரிமுத்துவின் மனைவி ஆரோக்கியமேரியை காலால் எட்டி உதைத்தாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ் பீட்டரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்