< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தம்பதி மீது தாக்குதல்
|16 July 2023 9:44 PM IST
அரியாங்குப்பம் அருகே தம்பதியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் மணவெளி தேர்முட்டி வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). அவரது மனைவி சுமதி. இவர்கள் சென்னைக்கு காரில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வாழுமுனியின் மனைவி சங்கரி ரோட்டின் குறுக்காக குப்பை தொட்டியை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை எடுத்து சாலையோரமாக வைக்க செந்தில்குமார் காரில் இருந்து இறங்கி சென்றார். அப்போது செந்தில்குமார், அவரது மனைவி சங்கரி உள்பட 4 பேர் சேர்ந்து செந்தில்குமாரை தாக்கினர்.
மேலும் தடுக்க முயன்ற அவரது மனைவி சுமதியும் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த 2 பேரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வாழுமுனி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.