< Back
புதுச்சேரி
கல்லூரி மாணவி மீது தாக்குதல்
புதுச்சேரி

கல்லூரி மாணவி மீது தாக்குதல்

தினத்தந்தி
|
13 Oct 2023 10:13 PM IST

வில்லியனூர் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த முருகசாமி மகள் அஷ்மிதா (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். இவரது குடும்பத்துக்கும், அவரது பெரியப்பா நாராயணசாமி குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் வீட்டில் தனியாக அஷ்மிதா இருந்த நிலையில், நாராயணசாமி மற்றும் அவரது மகன் ராம்குமார் ஆகியோர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரையும், அவரது சசோதரியையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார், மாணவியை தாக்கிய உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்