< Back
புதுச்சேரி
ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
புதுச்சேரி

ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
25 July 2023 10:13 PM IST

மூலக்குளம் அருகே ரகளை செய்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டார்.

மூலக்குளம்

புதுச்சேரி சண்முகாபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 36). ஆட்டோ டிரைவர். நேற்று திலாசுபேட்டையை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன்குமார், சுரேஷ் ஆகியோர் அங்கு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை முத்துக்குமரன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முத்துக்குமரனை தடியால் தாக்கினர். இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் விக்னேஷ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்