< Back
புதுச்சேரி
காமராஜர் பொறியியல் கல்லூரியில் கலைவிழா
புதுச்சேரி

காமராஜர் பொறியியல் கல்லூரியில் கலைவிழா

தினத்தந்தி
|
18 July 2023 9:55 PM IST

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் கலைவிழா நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கலை மற்றும் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கலைவிழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

விளையாட்டு போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் ராஜவர்மன், பேராசிரியர்கள் பிரவீன்குமார், ஞானமுருகன் ஆகியோர் நடத்தினர். முன்னாள் மாணவர்கள் பலர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் ஆராமுதன், துணை முதல்வர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்