< Back
புதுச்சேரி
நிலுவை ஊதியத்தை விரைவில் வழங்க வேண்டும்
புதுச்சேரி

நிலுவை ஊதியத்தை விரைவில் வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
20 Aug 2023 10:19 PM IST

நிலுவை ஊதியத்தை விரைவில் வழங்க வேண்டும் காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் முதல் - அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

காரைக்கால்

காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசின் கொள்கை முடிவுகளாலும், உள்ளாட்சித்துறை நிர்வாகத்தின் அலட்சிய போக்காலும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன்களின் வரி வருவாய்கள் மற்றும் அரசு வழங்கும் கொடைகள் முற்றிலுமாக குறைந்ததன் விளைவாக கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 5 முதல் 6 மாத ஊதியமும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 4 வருடங்களுக்கு மேலாக ஓய்வூதிய பலன்களும் வழங்கப் படாமல் உள்ளது.

இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் நிதி துறை மற்றும் உள்ளாட்சித்துறை நிர்வாகத்தின் அலட்சியத்தால் காரைக்கால் பகுதி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மிகுந்த மனவிரக்தியில் உள்ளனர். இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் தலையிட்டு நிலுவையில் உள்ள மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்