< Back
புதுச்சேரி
புதுச்சேரி
நிலுவை ஊதியம் வழங்க வேண்டும்
|28 July 2023 10:10 PM IST
நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என கான்பெட் ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றி வரும் புதுச்சேரி அரசு நிறுவனமான கான்பெட் ஊழியர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2023 மார்ச் மாதம் வரை நிலுவை ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த வங்கி கடன் தொகை, இ.எஸ்.ஐ. நிதி மற்றும் தொழிலாளர் வைப்பு நிதியை காலதாமதமின்றி செலுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் கான்பெட் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இச்சந்திப்பின்போது, காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.