< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
|16 Aug 2023 10:58 PM IST
புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டு துறை சார்பில் கலைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
புதுச்சேரி
புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டு துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் புதுச்சேரி கலைவிழா-2023 கடற்கரை காந்தி திடல் மற்றும் லாஸ்பேட்டை, காலாப்பட்டு, மடுகரை, திருக்காஞ்சி ஆகிய 5 இடங்களில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
இதில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். கலைவிழா நிறைவு கடற்கரை காந்தி திடலில் இன்று மாலை நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சந்திரபிரியங்கா, துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.