< Back
புதுச்சேரி
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
1 Aug 2023 10:37 PM IST

புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி

புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் போதைப்பொருள் மற்றும் புகையிலை எதிர்ப்பு, நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை பாரதிதாசன் மகளிர் கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில், புகையிலை மற்றும் போதைப்பொருட் களினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த ஊர்வலம் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே நிறைவடைந்தது. இதில் மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் அருளரசி, கல்லூரியின் போதைப்பொருள் மற்றும் புகையிலை எதிர்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர் உமாராணி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் ஆரோக்கியமேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்