< Back
புதுச்சேரி
புதுச்சேரி
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|18 Oct 2023 8:12 PM IST
கிருமாம்பாக்கம் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பாகூர்
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் கருணாகரன், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரஸ்வதி, கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் ஊர்வலமாக சென்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், ஆசிரியர்கள், மகளிர் கூட்டமைப்பினர், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.