< Back
புதுச்சேரி
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
புதுச்சேரி

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
5 July 2023 11:15 PM IST

நெடுங்காடு அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

கோட்டுச்சேரி

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் உள்ள ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சமுதாய நலப்பணித் திட்டம் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் பேசுகையில், போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், உடல் உபாதைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கல்வி பாதிக்கும் சூழல் உண்டாகும். இதை தவிர்த்து பள்ளி மாணவ-மாணவிகள், தேவையான சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்த்து உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்