< Back
புதுச்சேரி
டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி

டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
31 July 2023 10:45 PM IST

காரைக்காலில் டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் காரைக்கால்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மருத்துவ அதிகாரி அரவிந்தன் தலைமை தாங்கினார். நோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தேனாம்பிகை, மாவட்ட மலேரியா தொழில்நுட்ப உதவியாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். காரைக்கால்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்கிரிசாமி அரசு உயர்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்