< Back
புதுச்சேரி
டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி

டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
14 July 2023 9:13 PM IST

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் செவிலியர் கல்லூரி மாணவிகளின் டெங்கு எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார், நோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் தேனாம்பிகை, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சிவராஜ்குமார் பேசுகையில், மழைக்காலம் தொடங்க உள்ளதால் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவானது நமது குடியிருப்பு பகுதியை ஒட்டி தேங்கும் நல்ல தண்ணீரில் தான் முட்டையிட்டு உற்பத்தியாக்கும். அதனால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, தந்தை பெரியார் பள்ளி அருகே நிறைவு பெற்றது. ஊர்வலத்தில், அன்னை தெரசா செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு டெங்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தில் நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேதுபதி, அன்னை தெரசா செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெயபாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்